தமிழ் சட்டமன்றம் யின் அர்த்தம்

சட்டமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் சட்டப்பேரவையையும் மேலவையையும் கொண்ட, அரசின் மூன்று அங்கங்களில் ஒன்று.

    ‘நீதிமன்றம், சட்டமன்றம், நிர்வாகம் ஆகிய மூன்றும் அரசின் அங்கங்களாகும்’
    ‘சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’
    ‘சட்டமன்ற உறுப்பினர்’