தமிழ் சீட்டியடி யின் அர்த்தம்

சீட்டியடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

 • 1

  (வாயால்) சீட்டி எழுப்புதல்.

  ‘சீட்டியடித்ததும் நாய் ஓடி வந்து காலடியில் நின்றது’
  ‘திரையரங்கில் மின்சாரம் போனதும் ரசிகர்கள் சீட்டியடித்துக் கலாட்டா செய்தார்கள்’

 • 2

  (பாட்டை) சீட்டியால் வாசித்தல்.

  ‘ஒரு பாட்டைச் சீட்டியடித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்’