தமிழ் சீட்டு யின் அர்த்தம்

சீட்டு

பெயர்ச்சொல்

 • 1

  எண்களும் படங்களும் அச்சிடப்பட்ட, விளையாடப் பயன்படுத்தும் 52 அட்டைகள் அல்லது அட்டைகளுள் ஒன்று/மேற்குறிப்பிட்ட அட்டைகளைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு.

  ‘ஒரு சீட்டுக் கட்டு வாங்கிவா!’
  ‘உன் சீட்டை இறக்கு!’
  ‘சீட்டுக் கச்சேரி முடிய வெகு நேரமாயிற்று’
  ‘சீட்டு விளையாட்டில் சொத்துகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தவர்கள் பலர்’

 • 2

  (உறுப்பினர்களை) குறிப்பிட்ட நாட்களுக்குக் குறிப்பிட்ட தொகை என்று கட்டச் செய்து குலுக்கலின் மூலம் அல்லது ஏலத்தின் மூலம் தொகையையோ பொருளையோ தரும் முறை.

  ‘நீயும் பாத்திரச் சீட்டில் சேருகிறாயா?’

 • 3

  (பணம் கட்டுதல், அடகு வைத்தல் முதலியவற்றுக்கான) ரசீது.

  ‘அடகுச் சீட்டு’

 • 4

  (பேருந்து, ரயில் முதலியவற்றில்) பயணத்திற்குச் செலுத்திய கட்டணத்திற்கு அத்தாட்சியாகத் தரப்படும் அச்சடிக்கப்பட்ட சிறு அட்டை அல்லது தாள்.

 • 5

  (குறிப்பு, முகவரி முதலியவை எழுதிய) துண்டுத் தாள்.

  ‘மேடையில் பேசிக்கொணடிருந்த அமைச்சரிடம் அவருடைய உதவியாளர் ஒரு சீட்டைத் தந்தார்’

 • 6