தமிழ் சட்டென்று யின் அர்த்தம்

சட்டென்று

வினையடை

 • 1

  (கவனத்தில், உணர்வில் பட்டதும்) உடனடியாக; (சொன்னதும்) விரைவாக.

  ‘பல வருடங்கள் கழித்துப் பார்க்கும் நண்பனைச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை’
  ‘அடுப்பில் இருந்த பாத்திரத்தைத் தொட்டவள் சட்டென்று கையை இழுத்துக்கொண்டாள்’
  ‘எந்த வேலையையும் அவன் சட்டென்று செய்ய மாட்டான்’

 • 2

  (இவ்வாறு நிகழப்போகிறது என்பதற்கான) முன் அறிகுறி இல்லாமல்; திடீரென்று.

  ‘மழை சட்டென்று நின்றுவிட்டது’
  ‘திரையரங்கில் விளக்கு சட்டென்று அணைந்தது’
  ‘பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் சட்டென்று குனிந்தார்’