தமிழ் சட்டை யின் அர்த்தம்

சட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக ஆண்கள் அணியும்) வெளிப்பக்கமாக மடியும் கழுத்துப்பட்டியும் முன்பக்கத்தில் பித்தான்களும் வைத்துத் தைக்கப்பட்ட, கைகளை நுழைத்துப் போட்டுக்கொள்ளும், இடுப்புக்குச் சற்றுக் கீழே நீளும் மேல் உடை.

  ‘அரைக்கைச் சட்டை’
  ‘முழுக்கைச் சட்டை’

 • 2

  ரவிக்கை.

  ‘அம்மா சுமங்கலிகளுக்குச் சட்டைத் துணி வைத்துக் கொடுத்தார்’

 • 3

  (பாம்பும் வேறு சில உயிரினங்களும்) உடலிலிருந்து உரித்து நீக்கும் மெல்லிய மேல் தோல்.