சட்டம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சட்டம்1சட்டம்2

சட்டம்1

பெயர்ச்சொல்

 • 1

  பாராளுமன்றத்தாலோ சட்டமன்றத்தாலோ பொதுமக்கள் நலன் கருதி இயற்றப்படுவது.

 • 2

  மக்களின் நலனுக்காக இறையாண்மை வகுக்கும் நெறிமுறை.

 • 3

  (செயல்பாட்டை வரையறுக்கும்) விதி.

  ‘சட்டப்படிதான் நடப்பேன்.’

சட்டம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சட்டம்1சட்டம்2

சட்டம்2

பெயர்ச்சொல்

 • 1

  (கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு) கட்டைகளை இணைத்து அவற்றின் இடையே இடைவெளி விட்டுச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு.

  ‘இந்தப் படத்தைச் சட்டம் போட்டு வீட்டில் மாட்டிவைக்கலாம்’
  ‘ஜன்னலுக்கான சட்டம் மட்டுமே செய்திருக்கிறோம். இனிமேல்தான் கதவு செய்ய வேண்டும்’

 • 2

  (நாற்காலி, மேசை, கதவு போன்ற மரச் சாமான்கள் செய்வதற்காக) அளவாக வெட்டப்பட்ட மரத்துண்டு.

  ‘இழைப்புளி வைத்து அந்தச் சட்டத்தை நன்றாக இழைத்துக் கொண்டு வா’
  ‘ஜன்னலுக்காகச் சட்டங்களை அறுத்துக்கொண்டிருந்தார்கள்’

 • 3

  வட்டார வழக்கு (கூரை, வண்டி முதலியவற்றில் இணைத்துப் பிடித்துக்கொள்ள அல்லது தாங்கிக்கொள்ள உதவும்) கனமான செவ்வக வடிவக் கட்டை.

  ‘வண்டிச் சட்டத்தில் ஒன்று முறிந்திருக்கிறது’