தமிழ் சீண்டு யின் அர்த்தம்

சீண்டு

வினைச்சொல்சீண்ட, சீண்டி

  • 1

    (விளையாட்டாகவோ உள்நோக்கத்துடனோ ஒருவருக்கு) கோபம், எரிச்சல் ஆகியவை உண்டாகுமாறு சிறு தொல்லை தருதல்; தொல்லை தருவதன் மூலம் எதிர்த்துச் செயல்படத் தூண்டுதல்.

    ‘என்னைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்காதே!’
    ‘பூனையைச் சீண்டப்போய் அது என்னைப் பிறாண்டிவிட்டது’
    ‘மாப்பிள்ளைத் தோழன் மாப்பிள்ளையை அடிக்கடி சீண்டிக்கொண்டிருந்தான்’