தமிழ் சத்தியம் யின் அர்த்தம்

சத்தியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பொய் இல்லாதது; உண்மை.

  ‘நான் சொல்வதெல்லாம் சத்தியம்; என்னை நம்புங்கள்!’
  ‘சத்தியமாகச் சொல்கிறேன், எனக்கு ஒன்றும் தெரியாது’
  ‘நீங்கள் சொல்வது சத்தியமான வார்த்தை’

 • 2

  (வாக்கில் நேர்மை, நடத்தையில் ஒழுக்கம் போன்ற) உயர்ந்த வாழ்க்கை நெறி.

  ‘அவர் சத்தியம் தவறாதவர்’
  ‘சத்தியசீலர்’
  ‘சத்தியத்தையே கடைப்பிடி என்று எல்லோரும் சொல்கிறார்கள்’

 • 3

  (தெய்வம், தாய் முதலியோர்மேல் செய்யும்) ஆணை.

  ‘நான் வணங்கும் தாய்மேல் சத்தியம். நான் இதைச் செய்யவில்லை’