தமிழ் சதம் யின் அர்த்தம்

சதம்

பெயர்ச்சொல்

 • 1

  (கிரிக்கெட் விளையாட்டில்) நூறு (ஓட்டங்கள்).

  ‘அதிரடியாக ஆடி டெண்டுல்கர் சதம் அடித்தார்’
  உரு வழக்கு ‘திரையுலகில் சதமடித்த பெருமை பல நடிகர்களுக்கு உண்டு’

 • 2

  சதவீதம்.

  ‘இங்கிருந்து வெளியேறும் பொருளுக்குப் பத்து சத வரிவிதிப்பு உண்டு’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு ரூபாயின் நூறில் ஒரு பங்கு; காசு.

தமிழ் சீதம் யின் அர்த்தம்

சீதம்

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு குளிர்ச்சி; குளிர்ந்த தன்மை.

  ‘மோர் சீதம்தான்; கோடையில் நிறையக் குடிக்கலாம்’

தமிழ் சதம் யின் அர்த்தம்

சதம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு நிரந்தரமானது; உறுதியானது; நித்தியம்.

  ‘வாழ்க்கையில் எதுவுமே சதம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடாதே!’

தமிழ் சீதம் யின் அர்த்தம்

சீதம்

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (மலத்தில்) இரத்தமும் சளியும்.

  ‘குழந்தைக்குக் காலையிலிருந்து சீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது’