தமிழ் சந்தடிசாக்கில் யின் அர்த்தம்

சந்தடிசாக்கில்

வினையடை

  • 1

    (ஒன்றைச் சொல்லும்போதோ செய்யும்போதோ) தனித்துத் தெரிய வேண்டாம் என்பதற்காகப் பிறவற்றுக்கு இடையில்.

    ‘மேலதிகாரியைச் சந்திக்கச் சென்றவன், சந்தடிசாக்கில் தன் பதவி உயர்வைப் பற்றி நினைவுபடுத்திவிட்டு வந்தான்’
    ‘சந்தடிசாக்கில் தன் மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தர வேண்டும் என்பதையும் அதிகாரியிடம் சொல்லிவைத்தார்’