தமிழ் சந்தனம் யின் அர்த்தம்

சந்தனம்

பெயர்ச்சொல்

 • 1

  மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படும் மரம்.

  ‘சந்தனத் தைலம்’
  ‘சந்தனக் கட்டை’
  ‘சந்தனச் சிலை’

 • 2

  மேற்குறிப்பிட்ட மரத்தின் கட்டையைத் தேய்த்துப் பெறப்படும் (மங்கலப் பொருளாகக் கருதப்படும்) மஞ்சள் நிறச் சாந்து.

  ‘திருமணத்திற்கு வருபவர்களைக் குங்குமம், சந்தனம் கொடுத்து வரவேற்பது சம்பிரதாயம்’
  ‘சந்தனப் பொட்டு’