தமிழ் சந்தர்ப்பம் யின் அர்த்தம்

சந்தர்ப்பம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று) நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்; நேரம்; சூழ்நிலை.

  ‘ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நான் சொன்னதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாயா?’
  ‘சாப்பாட்டுக்குக் காசு இல்லாத சந்தர்ப்பத்தில் தண்ணீர் குடித்துப் பசியைப் போக்கியிருக்கிறேன்’

 • 2

  வாய்ப்பு.

  ‘குறைகளை நீக்கக் கூடிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டாயே!’
  ‘அமெரிக்கா போகும் சந்தர்ப்பம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை’
  ‘சிறு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்’