தமிழ் சந்திப்பு யின் அர்த்தம்

சந்திப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் செயல்.

  ‘கடற்கரையில் காதலர்களின் சந்திப்பு’
  ‘இரு நாட்டுத் தலைவர்களிடையே சந்திப்பு மூன்று மணி நேரம் நடைபெற்றது’

 • 2

  சாலைகள் சேரும் இடம்; (இரண்டுக்கு மேற்பட்ட திசைகளில் போகும் இருப்புப்பாதைகள் உள்ள இடத்தில் அமைந்திருக்கும்) புகைவண்டி நிலையம்.

  ‘மாயவரம் சந்திப்பில் ரயில் மாறி நாகப்பட்டினம் செல்ல வேண்டும்’