தமிழ் சந்தியில் விடு யின் அர்த்தம்

சந்தியில் விடு

(சந்தியில் இழுத்துவிடு)

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (ஒருவருடைய) மரியாதையைக் கெடுத்து ஏளனத்திற்கு உள்ளாகும்படி செய்தல்.

    ‘உதவி செய்கிறேன் என்று அவர் சொன்னதை நம்பி இந்த வியாபாரத்தைத் தொடங்கினேன். என்னைச் சந்தியில் இழுத்துவிட்டுப் போய் விட்டார்’
    ‘என்னை நம்பு. உன்னைச் சந்தியில் விட்டுவிட மாட்டேன்’