தமிழ் சந்திரன் யின் அர்த்தம்

சந்திரன்

பெயர்ச்சொல்

 • 1

  பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் பிரகாசிப்பதுமான ஒரு துணைக்கோள்; நிலவு.

 • 2

  ஒரு கிரகத்தைச் சுற்றி வரும் துணைக்கோள்.

  ‘வியாழனுக்குப் பதினான்கு சந்திரன்கள் உண்டு’
  ‘யுரேனஸ் கிரகத்தை அதன் சந்திரன் கடந்து செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது’

 • 3

  சோதிடம்
  தாய், மனம், உணர்வுகள், நீர், வெண்மை நிறம், முத்து, வடமேற்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.