தமிழ் சந்து யின் அர்த்தம்

சந்து

பெயர்ச்சொல்

 • 1

  அகலம் குறைவான தெரு அல்லது வழி.

  ‘இந்தக் குறுகலான சந்தில் வண்டிகள் செல்ல முடியாது’

 • 2

  குறுகிய இடைவெளி; இடுக்கு.

  ‘பல்லின் சந்தில் ஏதோ சிக்கிக்கொண்டுவிட்டது’

தமிழ் சீந்து யின் அர்த்தம்

சீந்து

வினைச்சொல்சீந்த, சீந்தி

 • 1

  (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒருவரை) பொருட்படுத்துதல்; மதித்தல்.

  ‘வசதியாக இருந்தபோது அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். இப்போது அவனைச் சீந்தக்கூட ஆளில்லை’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறையில்) (பொருள்களுக்கான கிராக்கி குறித்து வரும்போது) குறைந்தபட்ச ஆர்வம் காட்டுதல்.

  ‘சந்தையில் தக்காளி வந்து குவிந்திருக்கிறது. சீந்தக்கூட யாரும் இல்லை’
  ‘புது ரக மோட்டார் சைக்கிள்கள் வந்த பிறகு, பழைய வண்டிகளை யாரும் சீந்துவதில்லை’