தமிழ் சந்தேகம் யின் அர்த்தம்

சந்தேகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இதுதான், இவ்வளவுதான் என்று) துணிந்து கூற முடியாத நிலை; ஐயம்.

  ‘அவன் முயற்சி வெற்றி பெறுமா என்பதில் என்னைப் போலவே உங்களுக்கும் சந்தேகமா?’
  ‘மரங்களை வெட்டினால் மழை குறைந்துவிடும்; சந்தேகமே வேண்டாம்’

 • 2

  (பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில்) தெளிவில்லாத நிலை.

  ‘இந்தப் பாடத்தில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?’
  ‘அந்தப் பேச்சாளர் பேசி முடித்ததும் ஒருவர் எழுந்து ‘ஐயா எனக்கு ஒரு சந்தேகம்’ என்றார்’

 • 3

  குற்றம் அல்லது தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் உணர்வு.

  ‘தினமும் நள்ளிரவில் வீட்டுக்கு வரும் மகன்மேல் சந்தேகம் ஏற்படுவது நியாயம்தான்’
  ‘சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார்’