தமிழ் சந்தைப்படுத்து யின் அர்த்தம்

சந்தைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (நுகர்வோரைச் சென்றடையும் வகையில்) தகுந்த ஏற்பாடுகளைச் செய்து பொருள்கள், சேவை போன்றவற்றை விற்பனைக்குக் கிடைக்கச் செய்தல்.

    ‘மூலிகை மருந்துகளைச் சந்தைப்படுத்துவதில் வெளிநாட்டு நிறுவனங்கள் முனைந்துள்ளன’
    ‘புதிய காப்பீட்டுத் திட்டங்களைக் கிராமப்புறங்களில் சந்தைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’