தமிழ் சந்தை யின் அர்த்தம்

சந்தை

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும்) கிராமங்களிலிருந்து ஒரு பெரிய ஊரின் எல்லைப்புறத்திற்குக் கால்நடை, உணவுப் பொருள்கள் முதலியவற்றை வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் கொண்டுவந்து நடத்தும் விற்பனை.

  ‘எங்கள் ஊரில் வெள்ளிக்கிழமைதோறும் சந்தை கூடும்’
  ‘மாட்டுச் சந்தை’

 • 2

  மேற்குறித்த விற்பனை நடக்கும் இடம்.

  ‘இன்று சந்தையில் நல்ல கூட்டம்’
  ‘நாளை என்னுடன் சந்தைக்கு வருகிறாயா?’

 • 3

  உற்பத்திசெய்யப்பட்ட பொருளை வாங்கி விற்று வியாபாரம் நடத்தவோ ஒரு சேவையைத் தரவோ வாய்ப்புகள் மிகுந்த நிலைமை அல்லது சூழல்.

  ‘மின்னணுப் பொருள்களுக்கு வெளிநாட்டுச் சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது’
  ‘சீனாவில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா பெரிய சந்தையாக விளங்குகிறது’
  ‘கைத்தறித் துணிகளுக்கான சந்தையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்’