தமிழ் சன்மானம் யின் அர்த்தம்

சன்மானம்

பெயர்ச்சொல்

  • 1

    (செயலுக்கோ படைப்புக்கோ சாதனைக்கோ) அன்பளிப்பாகத் தரப்படும் பணம் அல்லது பொருள்; வெகுமதி.

    ‘காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் அளிக்கப்படும்’
    ‘கலைஞர்களுக்குச் சன்மானம் வழங்குவதை ஜமீன்தார் கௌரவமாகக் கருதினார்’
    ‘நண்பர் எழுதிய கதைக்கு ஐநூறு ரூபாய் சன்மானம் கிடைத்தது’