தமிழ் சனியன் பிடி யின் அர்த்தம்

சனியன் பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    (தீமை ஏற்படும் சக்தியால்) பீடிக்கப்படுதல்.

    ‘புது வியாபாரத்தை என்றைக்கு ஆரம்பித்தேனோ அன்றைக்கே எனக்கு சனியன் பிடித்துவிட்டது’
    ‘இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே சனியன் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். எதைத் தொட்டாலும் நஷ்டமாகவே முடிகிறது’