தமிழ் சப்பரம் யின் அர்த்தம்

சப்பரம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கோயிலில் அல்லது மாதா கோயிலில் விழாவின்போது விக்கிரகங்களை வைத்து இழுத்துச்செல்லப் பயன்படும் தேர்போல அலங்கரிக்கப்பட்ட சிறு வண்டி.

    ‘இந்தக் கோயிலுக்குத் தேர் இல்லை. சப்பரத்தில்தான் சாமி வரும்’
    ‘சப்பரத்தில் கன்னி மேரியின் சிலைக்குப் பின்னே சிறு பெண்கள் பாடிக்கொண்டு வந்தார்கள்’

  • 2

    வட்டார வழக்கு (குழந்தைகள் வைத்து விளையாடும்) சிறு தேர்.