தமிழ் சப்பு யின் அர்த்தம்

சப்பு

வினைச்சொல்சப்ப, சப்பி

 • 1

  (கடிக்காமல்) வாய்க்குள் வைத்து அழுத்தி உறிஞ்சுதல்.

  ‘பெரும்பாலான குழந்தைகள் கட்டை விரலைத்தான் சப்பும்’
  ‘இந்த மாத்திரையை விழுங்க வேண்டாம்; சப்பியே சாப்பிடலாம்’

 • 2

  வட்டார வழக்கு (வீக்கம்) வடிதல்; குறைந்து அமுங்குதல்.

  உரு வழக்கு ‘நான் சொன்னதைக் கேட்டதும் அவன் முகம் சப்பிவிட்டது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு குதப்புதல்.

  ‘பொக்கல் வாய்க்குள் எந்த நேரமும் வெற்றிலையைப் போட்டுச் சப்பிக்கொண்டிருக்கிறீர்கள்’

தமிழ் சீப்பு யின் அர்த்தம்

சீப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (தலை வாருவதற்குப் பயன்படும்) நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பற்கள் கொண்ட பட்டையான சாதனம்.

தமிழ் சீப்பு யின் அர்த்தம்

சீப்பு

பெயர்ச்சொல்

 • 1

  வாழைக் குலையிலிருந்து பிரித்தெடுக்கும் வகையில் பழங்களை அடுத்தடுத்துக் கொண்டிருக்கும் ஓர் அடுக்கு அல்லது ஒரு தொகுதி.

  ‘கடைக்குப் போனால் ஒரு சீப்பு மலைப்பழம் வாங்கிக்கொண்டு வா’