தமிழ் சப்பென்று யின் அர்த்தம்

சப்பென்று

வினையடை

 • 1

  (உப்பு, உறைப்பு, புளிப்பு முதலிய) சுவை எதுவும் இல்லாமல்; ருசியற்று.

  ‘ரசம் என்றால் காரசாரமாக இருக்க வேண்டாமோ? இப்படியா சப்பென்று இருக்கும்?’

 • 2

  (கதை, திரைப்படம், ஒரு நிகழ்ச்சி, சொல்லப்படும் தகவல் முதலியவை) சுவாரசியம் இல்லாமல்; விறுவிறுப்பற்று; எதிர்பார்த்தபடி இல்லாமல்.

  ‘கதையின் முடிவு தெரிந்துவிட்டதால் சப்பென்று போய்விட்டது’
  ‘எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் முடிந்ததால் பத்திரிகைகளுக்குச் சப்பென்று ஆகிவிட்டது’