தமிழ் சபி யின் அர்த்தம்

சபி

வினைச்சொல்சபிக்க, சபித்து

  • 1

    சாபமிடுதல்.

    ‘தன்னுடைய தவத்தைக் கலைத்த அரக்கனை முனிவர் சபித்தார்’
    ‘‘கோயில் சொத்தைத் திருடிய நீ மண்ணாகத்தான் போவாய்’ என்று பெரியவர் சபித்தார்’
    உரு வழக்கு ‘நேரத்திற்கு வராத ரயிலைச் சபித்தாள்’