தமிழ் சபைக்கூச்சம் யின் அர்த்தம்

சபைக்கூச்சம்

பெயர்ச்சொல்

  • 1

    (மேடையில் பேச அல்லது பாட வரும் ஒருவருக்கு) கூட்டத்தினரைக் கண்டு எழும் பயம் அல்லது கூச்சம்.

    ‘சிறுவனுக்குக் கொஞ்சமும் சபைக்கூச்சம் இல்லை’
    ‘இவ்வளவு சபைக்கூச்சம் இருந்தால் நடிக்க முடியாது’