தமிழ் சமநிலை யின் அர்த்தம்

சமநிலை

பெயர்ச்சொல்

 • 1

  ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத நிலை.

  ‘வயதில் சிறியவராக இருப்பவரையும் சம நிலையில் வைத்துதான் பேசுவார்’

 • 2

  வெவ்வேறு தன்மைகள், போக்குகள் உள்ள ஒரு சூழ்நிலையில் எந்த ஒன்றும் மற்றவற்றைவிட அதிக ஆதிக்கம் செலுத்தாத, சீராக இருக்கும் நிலை.

  ‘நதிகளில் சேரும் ரசாயனக் கழிவுகளால் சுற்றுப்புறச்சூழலின் சமநிலை பாதிக்கப்படுகிறது’
  ‘இறக்குமதி அதிகமானால் நாட்டின் வர்த்தகச் சமநிலை சீர்குலையும்’

 • 3

  (சில விளையாட்டுகளில்) வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத நிலை; இரண்டு வீரர்களோ அணிகளோ சம அளவில் புள்ளிகளைப் பெற்று எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் முடியும் நிலை.

  ‘பஞ்சாப் அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையே நடைபெற்ற கூடைப்பந்து ஆட்டம் சமநிலையில் முடிந்தது’
  ‘சமநிலையில் இருந்த அணிகளுக்கு இடையில் மீண்டும் போட்டி நடத்தப்பட்டது’
  ‘வெற்றி பெறுவதற்கு ஒரு ஓட்டம் எடுக்க வேண்டிய நிலையில் கடைசி வீரரும் ஆட்டம் இழந்ததால் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிந்தது’