தமிழ் சமன்பாடு யின் அர்த்தம்

சமன்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றுக்கொன்று) ஒத்த அளவில் இருக்கும் நிலை.

    ‘உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும்போது உடலின் கார அமிலச் சமன்பாடு பாதிக்கப்படுகிறது’

  • 2

    கணிதம்
    (இயற்கணிதத்தில்) (குறியீடுகளைப் பயன்படுத்தி) இரண்டு அளவுகள் சமம் என்று குறிப்பிடும் கூற்று.