தமிழ் சம்பந்தம் யின் அர்த்தம்

சம்பந்தம்

பெயர்ச்சொல்

 • 1

  தொடர்பு.

  ‘பேசுவதைக் கவனி; சம்பந்தம் இல்லாமல் ஏதாவது உளறாதே!’
  ‘புத்தகத்தின் தலைப்புக்கும் உள்ளே இருக்கும் விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லை’
  ‘அவனுக்கும் இந்த நிறுவனத்துக்கும் எந்த விதச் சம்பந்தமும் கிடையாது’
  ‘திரைப்படம் சம்பந்தப்பட்ட துறைகள்’
  ‘கள்ளக்கடத்தலில் அந்த அதிகாரிக்குச் சம்பந்தம் இல்லை’

 • 2

  திருமண உறவு.

  ‘உங்கள் குடும்பத்தோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்புகிறோம்’