தமிழ் சம்பாதி யின் அர்த்தம்

சம்பாதி

வினைச்சொல்சம்பாதிக்க, சம்பாதித்து

 • 1

  (வருமானமாக) பணம் பெறுதல்; (லாபம்) ஈட்டுதல்; (செல்வம்) சேர்த்தல்.

  ‘மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன், போதவில்லை’
  ‘பாட்டனார் சம்பாதித்த சொத்து’
  ‘இந்தத் தொழிலில் என் மாமனார் ஏகப்பட்ட லாபம் சம்பாதித்துவிட்டார்’

 • 2

  (ஒருவரின் பிரியம், நன்மதிப்பு முதலியவற்றை) தேடிப் பெறுதல்/(நல்ல பெயர் அல்லது கெட்ட பெயர்) பெறுதல்.

  ‘மேலதிகாரியின் நல்லெண்ணத்தைச் சம்பாதிப்பதில் அவன் குறியாக இருக்கிறான்’
  ‘அவரிடம் நல்ல பெயர் சம்பாதிப்பது கடினம்’
  ‘குடும்பத்தில் நடப்பதைச் சொல்லி என் தம்பி எல்லோருடைய கோபத்தையும் சம்பாதித்துக்கொண்டான்’