தமிழ் சம்பிரதாயம் யின் அர்த்தம்

சம்பிரதாயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தொன்றுதொட்டுப் பின்பற்றப்படும் பழக்கம், மரபு அல்லது நடைமுறை.

  ‘விருந்தினருக்குத் தாம்பூலம் கொடுப்பது ஒரு சம்பிரதாயம்’
  ‘மதச் சம்பிரதாயப்படி அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது’

 • 2

  ஈடுபாடு இல்லாமல் சடங்குபோல் செய்யப்படுவது.

  ‘கல்யாணத்துக்கு வந்துவிட்டுச் சாப்பிடாமல் போகக் கூடாது. சம்பிரதாயத்துக்குப் பாயசமாவது சாப்பிடுங்கள்’

 • 3

  (கலைகளில்) மற்றவற்றிலிருந்து தனித்துத் தெரியும் பாணி.

  ‘இந்த இளம் பாடகர் மதுரை சோமு சம்பிரதாயத்தைப் பின்பற்றிப் பாடுகிறார்’