தமிழ் சமம் யின் அர்த்தம்

சமம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒப்பிடும்போது) ஒத்த தன்மை; இணை; நிகர்.

  ‘தக்க சமயத்தில் உதவி செய்தீர்கள். நீங்கள் தெய்வத்திற்குச் சமம்’
  ‘இந்த ஓவியத்திற்குச் சமமான ஓவியத்தை நான் பார்த்ததில்லை’
  ‘சம வயது நண்பர்கள் யாரும் அவருக்கு இல்லை’

 • 2

  வேறுபாடற்ற தன்மை; ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை; சமதை.

  ‘அவர் எல்லோருடனும் சமமாகப் பழகுவார்’
  ‘சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்’

 • 3

  (வேறுபாடு அற்ற) ஒரே அளவு; சீராக இருக்கும் தன்மை.

  ‘இந்தப் பணத்தைச் சமமாகப் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்’
  ‘ஓர் உருண்டை பெரிதாகவும் மற்றொன்று சிறிதாகவும் இல்லாமல் சமமாக இருக்க வேண்டும்’

தமிழ் சமம் யின் அர்த்தம்

சமம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  (தாளம் போடும்போது) இசையின் தொடக்கமும் தாளத்தின் தொடக்கமும் ஒன்றாக இருப்பது.