தமிழ் சமயோசிதம் யின் அர்த்தம்

சமயோசிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சூழலுக்குப் பொருத்தமாக அறிவைப் பயன்படுத்தும் தன்மை.

    ‘ஓட்டுநர் சமயோசிதமாகப் பேருந்தைத் திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது’
    ‘சிறுமியின் சமயோசிதமான புத்தியை எண்ணி ஆசிரியர் வியந்தார்’