தமிழ் சம்ரட்சி யின் அர்த்தம்

சம்ரட்சி

வினைச்சொல்சம்ரட்சிக்க, சம்ரட்சித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவரை, ஒரு குடும்பத்தை) பேணிப் பாதுகாத்தல்; காப்பாற்றுதல்.

    ‘எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தைச் சம்ரட்சிப்பது சுலபமான காரியம் இல்லை’
    ‘எனக்கு இருக்கும் கஷ்டத்தில் உன்னை எத்தனை நாள் சம்ரட்சிக்க முடியும்?’