தமிழ் சமாதானப்படுத்து யின் அர்த்தம்

சமாதானப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (ஏமாற்றம், வருத்தம், கோபம் போன்ற உணர்வுகளைப் போக்கி) ஆறுதல் ஏற்படுத்துதல்.

  ‘கரடி பொம்மையை வாங்கிக் கொடுத்துதான் குழந்தையைச் சமாதானப்படுத்தினோம்’

 • 2

  (சண்டை, வழக்கு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும்) அமைதிப்படுத்துதல்.

  ‘வெகுநேரம் பேசிய பிறகுதான் அண்ணனைச் சமாதானப்படுத்த முடிந்தது’
  ‘தீவிரவாதிகளைச் சமாதானப்படுத்தினால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்’