தமிழ் சமாதி கட்டு யின் அர்த்தம்

சமாதி கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

 • 1

  (ஒருவரை) கொல்லுதல்.

  ‘‘நீ என் வழியில் அடிக்கடி குறுக்கிட்டால் உனக்குச் சமாதி கட்டிவிடுவேன்’ என்று அவன் மிரட்டினான்’

 • 2

  (ஒன்று மேலும் தொடராதபடி) முடிவுக்குக் கொண்டுவருதல்.

  ‘உன்னுடைய குடிப்பழக்கத்திற்குச் சமாதி கட்டினால்தான் நீ உருப்பட முடியும்’
  ‘சாதிச் சண்டைக்குச் சமாதி கட்டினால்தான் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்’