தமிழ் சமாளி யின் அர்த்தம்

சமாளி

வினைச்சொல்சமாளிக்க, சமாளித்து

 • 1

  (ஒன்றை அல்லது ஒரு முறையைக் கையாள்வதன் மூலம் ஒருவரையோ ஒரு பிரச்சினை, சவால் நிறைந்த சூழ்நிலை போன்றவற்றையோ) எதிர்கொள்ளுதல்.

  ‘போட்டியைச் சமாளிப்பதற்காகக் குளிர்பான நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு அதிகமாகச் செலவிடுகின்றன’
  ‘வறட்சியைச் சமாளிக்க நடவடிக்கை’
  ‘திடீரென்று விருந்தாளிகள் வந்து விட, இருக்கிற பாலைக் கொண்டு காப்பி போட்டுக் கொடுத்துச் சமாளித்தேன்’
  ‘குறும்பு செய்யும் குழந்தையைச் சமாளிக்க முடியாமல் பாட்டி திணறுகிறாள்’
  ‘கேட்ட கேள்விக்கு ஒழுங்காகப் பதில் சொல்வதை விட்டுவிட்டுச் சமாளிக்கப் பார்க்காதே’
  ‘அந்தப் பெண் திடீரென்று ஆங்கிலத்தில் பேசியதும் நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் திக்கித்திணறிப் பேசிச் சமாளித்தேன்’

 • 2

  மோசமான நிலையை அடையாமல் அல்லது அடைந்து அதிலிருந்து மீளுதல்; சுதாரித்துக்கொள்ளுதல்; நிதானித்துக்கொள்ளுதல்.

  ‘எதிரே வந்த வாகனம் மோதியும் தடுமாறிக் கீழே விழாமல் சமாளித்துக்கொண்டார்’
  ‘நேற்று நடந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் மிகவும் பின்தங்கியிருந்த இந்திய வீராங்கனை சமாளித்துக்கொண்டு போராடி வெற்றி பெற்றார்’