தமிழ் சம்பவம் யின் அர்த்தம்

சம்பவம்

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிடத் தக்க அல்லது நினைவுகூரத் தக்க நிகழ்ச்சி; நிகழ்வு.

  ‘எனது திருமணத்தன்று நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது’
  ‘நேற்று கூட்டத்தில் நடந்த சம்பவத்தை அவர் விவரித்துக் கொண்டிருந்தார்’

 • 2

  குற்றம், விபத்து போன்ற நிகழ்வு.

  ‘‘சம்பவம் நடந்த அன்று நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’ என்று சாட்சியை வழக்கறிஞர் கேட்டார்’
  ‘தொடர்ந்து நடைபெறும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மக்கள் மனத்தில் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன’