தமிழ் சர்க்கரை யின் அர்த்தம்

சர்க்கரை

பெயர்ச்சொல்

 • 1

  (தின்பண்டம், தேநீர் போன்றவற்றில் சேர்க்கும்) கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும், இனிப்புச் சுவையுடைய, தூள்தூளான வெண்ணிறப் படிகம்; சீனி.

  ‘காப்பிக்குச் சர்க்கரை போதுமா?’

 • 2

  வட்டார வழக்கு நாட்டுச்சர்க்கரை.

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு வெல்லம்.

  ‘சீனி பற்றாக்குறையாக இருந்த காலத்தில் நாங்கள் சர்க்கரைதான் பாவித்தோம்’

 • 4

  இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் என்னும் வேதிப்பொருள்.

  ‘அவருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது’