தமிழ் சரக்கு யின் அர்த்தம்

சரக்கு

பெயர்ச்சொல்

 • 1

  வியாபாரப் பொருள்.

  ‘கடைக்குச் சரக்கு எடுக்கப் போயிருக்கிறார்’
  ‘சரக்குகளை ஏற்றிச்செல்ல ஒரு வண்டி பிடித்துவா!’

 • 2

  (நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும்) பொருள்.

  ‘கடுக்காய் ஒரு வைத்தியச் சரக்கு’

 • 3

  பேச்சு வழக்கு விஷய ஞானம்; திறமை.

  ‘பேசுவதைப் பார்த்தால் ஆள் சரக்கு உள்ளவர் போல் தெரிகிறது’

 • 4

  பேச்சு வழக்கு மது.

  ‘கொஞ்சம் சரக்கு உள்ளே போனதும்தான் தெம்பு வந்தது’