தமிழ் சரகம் யின் அர்த்தம்

சரகம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு துறையில்) நிர்வாக வசதிகளுக்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் (ஊரின் சில பகுதிகளை உள்ளடக்கிய) உட்பிரிவு.

  ‘சென்னை நகரத் தெற்குச் சரகக் காவல் நிலையம்’
  ‘மதுரைச் சரக மருந்துப் பொருள்கள் ஆய்வாளர்’
  ‘இந்த ஊர் எங்கள் சரகத்திற்குள் வராது’

தமிழ் சீரகம் யின் அர்த்தம்

சீரகம்

பெயர்ச்சொல்

 • 1

  (சமையலில் பயன்படுத்தும்) ஒரு வகைக் குத்துச்செடியின் பழுப்பு நிறச் சிறு விதை.