தமிழ் சீர்குலை யின் அர்த்தம்

சீர்குலை

வினைச்சொல்-குலைய, -குலைந்து, -குலைக்க, -குலைத்து

 • 1

  (சகஜமான நிலை) மோசமாகப் பாதிக்கப்படுதல்; சீர்கெடுதல்.

  ‘அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் அன்றாட வாழ்க்கை சீர்குலைந்தது’
  ‘வறட்சியின் காரணமாகப் பொருளாதார வளர்ச்சி சீர்குலையலாம்’

தமிழ் சீர்குலை யின் அர்த்தம்

சீர்குலை

வினைச்சொல்-குலைய, -குலைந்து, -குலைக்க, -குலைத்து

 • 1

  ஒன்றின் ஒழுங்கை அல்லது சீரான தன்மையைக் கெடுத்தல்; சீர்கெடுத்தல்.

  ‘நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்படும்’
  ‘இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை யாரும் சீர்குலைத்துவிட முடியாது’

 • 2

  (வாழ்க்கையை) நாசம்செய்தல்; சீரழித்தல்.

  ‘என் மகளின் வாழ்க்கையைச் சீர்குலைத்த அந்தப் பாவியை நான் சும்மா விடப்போவதில்லை’