தமிழ் சர்ச்சை யின் அர்த்தம்

சர்ச்சை

பெயர்ச்சொல்

 • 1

  வாக்குவாதம்.

  ‘சர்ச்சை சண்டையில் முடிந்துவிடாத வரைக்கும் நல்லது’
  ‘மாணவர்களிடையே தேர்தலைப் பற்றி ஒரு காரசாரமான சர்ச்சை நடந்துகொண்டிருந்தது’

 • 2

  ஒரு கருத்து, செயல்பாடு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினை குறித்த விவாதம்.

  ‘பிரபல எழுத்தாளரின் சமீபத்திய நாவல் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது’
  ‘அந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளாயின’