தமிழ் சரடு யின் அர்த்தம்

சரடு

பெயர்ச்சொல்

 • 1

  (நூல், சணல் முதலியவற்றால்) நெகிழ்வாக முறுக்கப்பட்ட சிறு கயிறு.

  ‘ஒரு சரட்டைக் கொண்டுவந்து இந்தக் கோணிப்பையைக் கட்டு!’

 • 2

  பேச்சு வழக்கு (நூல் கயிற்றால் அல்லது தங்கச் சங்கிலியால் ஆன) தாலி.

  ‘அம்மாவின் கழுத்தில் மிஞ்சியது மஞ்சள் சரடு மட்டும்தான்’
  ‘திருமாங்கல்யச் சரடு’

 • 3

  (கதை, விவாதம் முதலியவற்றில்) தொடர்பு; பிணைப்பு.

  ‘தொடர்கதை எழுதுபவர்கள் சரடு விட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’