தமிழ் சரணடை யின் அர்த்தம்

சரணடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

 • 1

  குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் என்று கருதப்படுபவர் கைதாவது நிச்சயம் என்று தெரிந்ததும் தானாகவே முன்வந்து நீதிமன்றத்தில் தன்னை ஒப்புவித்துக்கொள்ளுதல்.

  ‘காவல்துறையினர் தன்னைக் கைதுசெய்யத் தேடி வருவதை அறிந்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்’

 • 2

  ராணுவம் போன்றவற்றுக்கு எதிர்ப்புக் காட்டாமல் அவர்களிடம் அடங்கிப்போதல்.

  ‘கிழக்குப் பாகிஸ்தானின் படைத்தளபதி இந்தியப் படையினரிடம் சரணடைந்தார்’

 • 3

  தஞ்சம் அடைதல்; சரண் புகுதல்.

  ‘‘இறைவனின் பாதத்தில் சரணடையுங்கள், எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்’ என்றார் பாகவதர்’
  ‘ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் நேற்று 28 பேர் அகதிகளாகச் சரணடைந்திருக்கின்றனர்’