தமிழ் சீரமை யின் அர்த்தம்

சீரமை

வினைச்சொல்-அமைக்க, -அமைத்து

 • 1

  (கட்டடம், சாலை முதலியவற்றை) செப்பனிடுதல்; பழுதுபார்த்தல்.

  ‘எங்கள் ஊர்க் கோவிலைச் சீரமைக்க அரசு உதவித்தொகை வழங்கியுள்ளது’
  ‘பிரதமர் வருகையை ஒட்டிச் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன’

 • 2

  (திட்டம், விதிமுறை முதலியவற்றை மாற்றியமைத்து) ஒழுங்குபடுத்துதல்; மேம்படுத்துதல்.

  ‘பள்ளிப் பாடத்திட்டம் அவ்வப்போது சீரமைக்கப்பட வேண்டும்’