தமிழ் சரளம் யின் அர்த்தம்

சரளம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்று) இயல்பாகவும் தடங்கல் இல்லாமலும் சீராகவும் அமையும் போக்கு.

  ‘அவர் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர்’
  ‘அவருடைய நாவலில் காணப்படும் சரளமான நடை படிக்கச் சுவாரசியமாக இருக்கும்’
  ‘இந்தத் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து சரளமாக நடைபெறுகிறது’
  ‘அவன் சரளமாகப் பொய் சொல்வான்’
  ‘கம்பைச் சுழற்றும்போது மணிக்கட்டு சரளமாகச் சுழல வேண்டும்’

 • 2

  (கொடுக்கல்வாங்கலில்) தட்டுப்பாடு இல்லாத நிலை.

  ‘பொருளாதார விஷயங்களில் சரளமான நிலைமை இருக்கும் என்று இந்த வார ராசிபலனில் போட்டிருந்தது’