தமிழ் சர்வ யின் அர்த்தம்

சர்வ

பெயரடை

 • 1

  அனைத்து; எல்லா.

  ‘அசுத்தமே சர்வ வியாதிகளுக்கும் காரணம்’
  ‘சர்வ மதத்தினரும் கலந்துகொண்ட கூட்டம்’

 • 2

  மிகுந்த; மிகவும்.

  ‘இந்தப் பகுதியில் பாம்புகள் அதிகம். இரவில் சர்வ ஜாக்கிரதையாக நடக்க வேண்டும்’
  ‘இந்தப் பேட்டையில் கலாட்டா நடப்பது சர்வ சாதாரணமான விஷயம்’
  ‘சர்வ வல்லமை படைத்த கடவுள்’

 • 3

  முழுமையான.

  ‘யானைகள் வயலில் இறங்கியதால் பயிர்கள் சர்வ நாசம் அடைந்தன’
  ‘சர்வ முட்டாள்’