தமிழ் சராசரி யின் அர்த்தம்

சராசரி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒரு தொகுப்பில் உள்ள வெவ்வேறு எண்களைக் கூட்டிப் பெறும் தொகையை அந்தத் தொகுப்பில் அடங்கியிருக்கும் எண்ணிக்கையால் வகுத்துப் பெறும் அளவு.

  ‘இந்தியாவில் ஒருவரின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?’
  ‘ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக ஐந்து லட்சம் பேர் பள்ளியிறுதித் தேர்வு எழுதுகிறார்கள்’
  ‘டெஸ்ட் போட்டிகளில் அவருடைய சராசரி 58.28 ஆகும்’
  ‘சராசரி மழை அளவைக் காட்டிலும் இந்த வருடம் மழை அதிகம்’

 • 2

  (கூடுதல் அல்லது குறைவு என்றோ உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்றோ கருதப்படாத) சாதாரண நிலை; நடுத்தரம்.

  ‘சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது சராசரி மனிதனுக்குள்ள ஆசை’
  ‘சராசரி வாசகனுக்குப் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கதை எழுதுகிறேன்’
  ‘சராசரியான உயரம்’
  ‘அவன் சராசரியான மாணவன்’