தமிழ் சரிக்கட்டு யின் அர்த்தம்

சரிக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

 • 1

  (இழப்பு, நஷ்டம், பற்றாக்குறை முதலியவற்றை) ஈடு செய்தல்.

  ‘விவசாயத்தில் ஓர் ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்த ஆண்டு கிடைக்கும் வருமானத்தில் சரிக்கட்ட முடியாது’
  ‘வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு புதிய வரிகளை விதிக்கிறது’
  உரு வழக்கு ‘இழந்த செல்வாக்கைச் சரிக்கட்டப்பார்க்கிறார்’

 • 2

  (ஒருவரை) ஒப்புக்கொள்ள வைத்தல்; இணங்க வைத்தல்; (தவறான அல்லது கருத்து வேறுபாடு உள்ள காரியத்துக்கு) ஒத்துப்போகச் செய்தல்.

  ‘பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து விஷயத்தைச் சரிக்கட்டிவிட்டார்’
  ‘வனக்காவலரைச் சரிக்கட்டிச் சந்தன மரத்தைக் கடத்த முயன்றவர் கைதுசெய்யப்பட்டார்’